மோசடிகள் இடம்பெறும் இடங்களில் தேர்தல் இரத்துச் செய்யப்படும்: தேர்தல் ஆணையாளர்

எதிர்வரும் ஜனா­தி­பதி தேர்தலில் கட­மையில் ஈடு­ப­ட­வுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு இடை­யூறு ஏற்ப­டுத்­து­­ப­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும், தேர்­தல்கள் ச...

thesapriyaஎதிர்வரும் ஜனா­தி­பதி தேர்தலில் கட­மையில் ஈடு­ப­ட­வுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு இடை­யூறு ஏற்ப­டுத்­து­­ப­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும், தேர்­தல்கள் சட்டங்­களை மீறு­வோ­ருக்கு எதி­ரா­கவும் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெனத் தெரி­வித்­துள்ள தேர்தல்கள் ஆணை­யா ளர் மஹிந்த தேசப்பிரிய,வாக்­குப்­பெட்­டிகள் மாற்றல் உட்­பட மோசடிகள் இடம்­பெறும் பட்­சத்தில் அந்தப் பகுதியில் தேர்தல் இரத்துச் செய்­யப்­படும் எனவும் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்­தல்கள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­­லாளர் மாநாடு நேற்று இராஜகிரிய­வி­லுள்ள தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் நடை­பெற்­றது. அங்கு கலந்து கொண்டு உரையாற்­று­கையி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தேர்தல் தினத்­தன்று கட­மை­களில் ஈடு­பட்­டுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு இடை­யுறு ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் தேர்தல் சட்­ட­திட்­டங்­களை மீறி செயட்­ப­டு­வோ­ருக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மறு­பு­றத்தில் தோ்தலில் ஊழல் மோச­டிகள் தொடர்பில் எமக்கு தக­வல்கள் கிடைக்கும் பட்­சத்தில் குறிப்­பிட்ட பிர­தே­சத்­திற்­கான தோ்தல் முற்­றாக இரத்து செய்­யப்­படும் தோ்தல் கட­மை­களில் ஈடு­படும் எமது அதி­கா­ரி­க­ளுக்கு இடை­யுறு ஏற்­ப­டுத்தல்இ அவர்­களை தாக்­குதல் உள்­ளிட்ட செயற்­பா­டு­களை மேற்­கொள்ள எதிர்­பார்க்கும் அர­சியல் பிர­மு­கர்­க­ளுக்கு இவ்­வி­டத்தில் ஒன்றைக் கூற விரும்­பு­கின்றேன். எமது அதி­கா­ரி­க­ளுக்கு எவ்­வா­றான இடை­யுறு விளை­விக்­கப்­பட்­டாலும் நாம் தொடர்ந்தும் அதி­கூ­டி­ய­ள­வான அதி­கா­ரி­களை தோ்தல் கட­மை­க­ளுக்கு ஈடு­ப­டுத்­துவோம். நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­தலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­செ­யற்­ப­டுவோம்.

வாக்­க­ளர்­க­ளுக்கு அறி­வு­றுத்தல்

அனைத்து வாக்­கா­ளர்­களும் தோ்தல் தினத்­தன்று இயன்­ற­வ­ரையில் காலை வேளையில் தமக்­கு­ரிய உரிய வாக்கு சாடி­க­ளுக்கு சென்று தமது வாக்­கு­களை அளிப்­ப­தோடு ஒவ்­வொறு வாக்­கா­ளரும் தமது ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தேசிய அடை­யாள அட்டை அல்­லது அங்­கீ­கா­ரக்­கப்­பட்ட ஆவ­ணங்­களைக் கொண்டு செல்­வது கட்­டா­ய­மா­னது. தமது அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்த தவ­று­ப­வர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்­கான அனு­மதி மறுக்­கப்­படும்.

பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்தல்

தோ்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் நேற்று திங்­கட்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் நிறை­வ­டைந்த நிலையில் எந்­த­வொரு அபேட்­ச­ருக்க சார்­பாக பிர­சாரம் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பொலிஸார் அனு­ம­தி­ய­ளிக்க கூடாது. தோ்தல்கள் சட்­ட­திட்­டங்­களை மீறி செயற்படுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தோ்தலில் வாக்களிப்பது அனைத்து மக்களின் உரிமை அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். அனைவரும் நீதியான, அமைதியான தேர்தல் நடைபெறுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றார்.

Related

இலங்கை 8878547729091908327

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item