மகிந்தவுக்கு எதிராக ஒரே அணியில் களமிறங்க சந்திரிக்கா , ரணில்,பொன்சேகா , சம்பிக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தீவிர ஆலோசனை…!
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக களத்தில் குத்தித்த அரசியல் சக்திகள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து வரும் பொது தேர்தலில் போட்...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_96.html
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக களத்தில் குத்தித்த அரசியல் சக்திகள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து வரும் பொது தேர்தலில் போட்டியிட தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கொழும்பில் இருந்து சற்று முன்னர் கிடைத்த செய்திகள் மடவளை நியுசுக்கு உறுதிபடுத்தின.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பு வேட்பு மனு வழங்க தீர்மானித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் மீது கடும் அதிருப்தியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் அவரின் அணியினர் உள்ளிட்ட குழுவொன்று வரும் போது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து வரும் பொது தேர்தலில் போட்டியிட தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கொழும்பில் இருந்து சற்று முன்னர் கிடைத்த செய்திகள் மடவளை நியுசுக்கு உறுதிபடுத்தின.
பிரதமர் ரணிலின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா,சந்திரிக்கா ,மங்கள,சம்பிக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்தவுக்கு எதிராக மைத்ரியுடன் இணைந்த சகல சக்திகளையும் இணைத்துக்கொண்டு அன்னம் சின்னத்தில் ஒரே கட்சியாக களமிறங்க ஆலோசனை முன்வைக்கப்பட்டு ஐக்கிய தேசிய கட்சி அதற்க்கு இணங்காத காரணத்தால் அது இழுபறி நிலையில் உள்ளது.
மேலும் வரும் பொது தேர்தலில் அமைச்சர் ராஜிதவின் மகனும் கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியில் களமிரங்க பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

