ஷிராந்தி ராஜபக்சவின் நிதியத்திற்கு சுங்க தீர்வையற்ற வாகனம் பரிசளிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை
முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்சவின் பெயரில் இயங்கி வரும் நலன்புரி நிறுவனத்திற்கு உலக உணவு திட்டத்தின் கீழ் சுங்க தீர்வையின...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_956.html
முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்சவின் பெயரில் இயங்கி வரும் நலன்புரி நிறுவனத்திற்கு உலக உணவு திட்டத்தின் கீழ் சுங்க தீர்வையின்றிய வாகனம் பரிசளிக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கார் ஓட்டப் பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் கார் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்த கார் உலக உணவு திட்டத்தினால், ஷிராந்தி ராஜபக்சவின் சிறிலிய சவிய நிதியத்திற்கு வழங்கிய கார்களில் ஒன்று என தெரியவந்துள்ளது.
350 வீத இறக்குமதி வரி அறவிப்பட வேண்டிய இந்த கார்களை இறக்குமதி செய்த போது எந்த நிறுவனத்திற்கும் வரியை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு இலங்கையை பாதித்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர், நாட்டை கட்டியெழுப்புவதற்காக இலங்கை செயற்பட்ட ஐ.நா அமைப்பின் பல்வேறு நிறுவனங்கள் வாகனங்களை இறக்குமதி செய்தன.
கொழும்பில் உள்ள உலக உணவு திட்டத்தின் அலுவலகம் இது சம்பந்தமாக எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை
எனினும் தமது அமைப்பின் சட்டத்திற்கும் உரிய வரையறைகளுக்கு அமையவுமே வாகனங்களை வழங்கியதாக பேங்கொக்கில் உள்ள உலக உணவுத் திட்டத்தின் பிராந்திய அலுவலகம் தெரிவித்திருந்தது.

