இங்கிலாந்து தேர்தல் நடைபெறவுள்ளதா என மக்கள் கேட்கின்றார்கள்: ரணில்

தேர்தல் சட்டங்களை பாதுகாக்கும் முறையினை பார்க்கும் போது இங்கிலாந்து தேர்தல்கள் நடைபெறவுள்ளதா என மக்கள் கேட்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க த...

ranil_meet_pikku_001
தேர்தல் சட்டங்களை பாதுகாக்கும் முறையினை பார்க்கும் போது இங்கிலாந்து தேர்தல்கள் நடைபெறவுள்ளதா என மக்கள் கேட்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் பல சிவில் அமைப்புக்களுக்கு இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதனை தொடர்ந்து கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடரந்து கருத்து வெளியிட்டவர்,
தேர்தல் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதனால் மக்கள் சுதந்திரமாக செயற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இம்முறை தேர்தல் நடைபெறுவது போன்று ஒரு உணர்வு தெரியவில்லை என மக்கள் கூறுகின்றார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் குறித்த சந்தர்ப்பத்தில் இணைந்துள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 8376497438534760674

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item