முஸ்லிம் வர்த்தகரை கொன்று கொள்ளையிட்டோர் சிக்கினர்
ஒருவர் கைது; நால்வர் தப்பியோட்டம் மினுவாங்கொடை நகரில் கடந்த ரமழான் மாதத்தில் நோன்பு துறக்கும் போது முஸ்லிம் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_730.html
ஒருவர் கைது; நால்வர் தப்பியோட்டம்
மினுவாங்கொடை நகரில் கடந்த ரமழான் மாதத்தில் நோன்பு துறக்கும் போது முஸ்லிம் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்துவிட்டு அவரது நகைக் கடையை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் கொள்ளைக் கோஷ்டியொன்று சீதுவை பகுதியில் உள்ள கட்டுநாயக்க -,கொழும்பு அதிவேக பாதை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தம்மை சோதனை செய்ய வந்த பொலிஸார் இருவரைத் தாக்கிவிட்டு அவர்களின் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் பிரதேசத்தின் ஓடை ஒன்றின் அருகே ஒளிந்திருந்த போது விஷேட தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் அன்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன் தினம் கட்டுநாயக்க - கொழும்பு அதிவேகப் பாதையின் சீதுவை நுழைவாயிலை அண்மித்த பகுதியில் கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்தப்பட்டுள்ளதை அப்பிரதேசத்தால் இரு மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த இடத்துக்கு சென்றுள்ள பொலிசார் அங்கிருந்த ஐவரினதும் தேசிய அடையாள அட்டைகளை சோதனைக்காக கோரியுள்ளனர்.

இதன் போது அந்த ஐவரும் சேர்ந்து அவ்விரு பொலிஸாரையும் பொல்லுகளால் தாக்கியுள்ளதுடன் காருக்குள் இருந்து இரு துப்பாக்கிகளையும் எடுத்து அவ்விருவரையும் அச்சுறுத்தி விட்டு பொலிஸார் இருவரும் வந்த இரு மோட்டார் சைக்கிள்களையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்படவே ஸ்தலம் விரைந்த பொலிஸார் விஷேட அதிரடிப்படையினரின் துணையுடன் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்தனர். இதன் போது பிரதேசத்தின் ஓடைப் பகுதி ஒன்றின் அருகே மறைந்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதன் பொருட்டு விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஐவரும் கொள்ளையில் ஈடுபடவே கார் ஒன்றை வாடகைக்கு பெற்று அதன் இலக்கத் தகட்டை மாற்றிக் கொண்டிருந்துள்ளமையும் இதன் போதே சிவில் உடையில் இருந்த பொலிஸார் சந்தேகம் கொண்டு அது தொடர்பில் சோதனை செய்ய சென்ற போது சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற இரு பொலிஸாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்களும் மினுவாங்கொடை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளில் இந்த கொள்ளைக் கும்பலானது வாகனங்களை வாடகைக்கு பெற்று இலக்கத் தகடுகளை மாற்றி பல கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளமையும் அண்மையில் மினுவாங்கொடையில் நோன்பு துறக்கும் போது நகைக் கடை உரிமையாளரை சுட்டுக்கொன்று விட்டு கொள்ளையிட்ட சம்பவமும் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.