முழு சமூகத்தையும் முத்திரை குத்த முடியாது : பௌசி

இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் சிரி­யாவில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பில் இணைந்து செயற்­பட்டார் என்­ப­தற்­காக முழு முஸ்லிம் சமு­தா­...


இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் சிரி­யாவில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பில் இணைந்து செயற்­பட்டார் என்­ப­தற்­காக முழு முஸ்லிம் சமு­தா­யத்­தையும் தீவி­ர­வா­திகள் என்று முத்­திரை குத்­தி­விட முடி­யாது. முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்­று­டை­ய­வர்கள்.

நாட்டின் சுதந்­தி­ரத்­துக்­காகப் போரா­டி­ய­வர்கள் என தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் விளக்­கி­யி­ருப்­ப­தாக அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் தலை­வ­ரு­மான ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார்.

இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்­டமை இஸ்­லாத்­துக்கும், இல்­லா­மிய சட்­டங்­க­ளுக்கும் விரோ­த­மான செய­லாகும். இதனை வன்­மை­யாக கண்­டிப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

ஐ.எஸ். ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பில் இணைந்து கொண்டு வான் ­தாக்­கு­தலில் பலி­யான இலங்கை முஸ்லிம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் “விடி­வெள்­ளி”க்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்,
எந்­த­வொரு முஸ்­லிமும் உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ தீவி­ர­வாத செயல்­களில் ஈடு­ப­டு­வதும், நாட்டின் இறை­யான்­மைக்கும் மாறாக நடந்து கொள்­வதும் இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான செய­லாகும்.

இதனை இஸ்லாம் ஒரு போதும் அனு­ம­திக்­க­வில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் ஏற்­பட்ட தொடர்­பு­களின் பின்­னணி, அதற்­கான காரணம், வெளி­நாட்டுத் தொடர்­புகள் பற்றி விசா­ர­ணைகள் நடாத்தி உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வ­தற்கு தாம் பூரண ஆத­ர­வி­னையும், ஒத்­து­ழைப்­பி­னையும் வழங்­கு­வ­தா­கவும் ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­வித்துள்ளேன்.

முஸ்­லிம்­களின் இவ்­வா­றான தொடர்­புகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனவாத அமைப்புகளுக்கு சாதகமாக அவர்களது பிரசாரங்களுக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் சமுதாய நலனைப்பேண வேண்டும் என்றார்.

Related

தலைப்பு செய்தி 4663947511761247112

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item