மஹிந்தவுக்கு எதிரான வழக்கு! விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் தலைமையிலா...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_701.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் தலைமையிலான நீதியரசர் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனையடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்குமாறு கோரி நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சமசமாஜ கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் சட்டத்தரணி சேனக பெரேராவினால் இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏனைய வேட்பாளர்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதனால் ஏனைய வேட்பாளர்களுக்கு அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் வரப்பிரசாதங்கள் வழங்கப்படாமையினால் அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

