மஹிந்தவின் வருகை! சுதந்திரக் கட்சியின் வங்குரோத்தை காட்டுகிறது: ஐ.தே.கட்சி
மஹிந்த ராஜபக்சவின் மீள்வருகையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வங்குரோத்து நிலைமையை காட்டுவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. பிர...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_565.html
பிரதிநீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று கொள்கையை காட்டிலும் தனிமனிதன் அரசியலில் ஈடுபட்டு வருகிறது இது மஹிந்த ராஜபக்சவின் மீள்வருகையின் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்றும் சுஜீவ குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரை அவர் அதிகாரப்பசி கொண்ட மனிதர். அவரைப் பொறுத்தவரையில் அதிகாரத்துக்கு வந்து தம்முடன் இருந்த ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக உள்ளது என்று சுஜீவ தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கிய விடயத்தை பொறுத்தவரையில் அது ஜனாதிபதியை பல்வேறு வழிகளில் பயமுறுத்தி பெற்றுக்கொண்டதாகும்.
எனவே இந்தவிடயத்தில் ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதியை குறைக்கூறவில்லை.
இந்தநிலையில் மஹிந்தவை பொறுத்தவரை அவர் மீண்டும் பின்கதவால் ஜனாதிபதி பதவியை குறிவைப்பதாகவும் சுஜீவ சுட்டிக்காட்டியுள்ளார்.

