வேட்புமனு வழங்குவதில் உடும்புபிடியாக நிற்கும் சந்திரிக்கா
மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளரான மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, வேட்புமனு வழங்குவதை முன்னாள...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_557.html
மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளரான மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, வேட்புமனு வழங்குவதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடுமையாக எதிர்த்துள்ளார்.
பலரது வேட்புமனுக்கள் தொடர்பான பணிகள் முடிவடைந்திருந்ததுடன் கம்பஹா மாவட்ட வேட்புமனு தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டன.
வேட்புமனு பட்டியலை ஆராய்ந்த சந்திரிக்கா, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண சபை உறுப்பினர்களான சமன்மலி சகலசூரிய மற்றும் சனத் பிரதீப் ஆகியோருக்கு வேட்புமனு வழங்குவதை எதிர்த்துள்ளார்.
இவர்கள் மூவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள் என்பதே சந்திரிக்காவின் இந்த எதிர்ப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

