முல்லைத்தீவில் சட்டவிரோத முறையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் கைது

குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி முல்லைத்தீவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீ...

முல்லைத்தீவில் சட்டவிரோத முறையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் கைது
குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி முல்லைத்தீவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் குறித்த இந்திய பிரஜைகள் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்த பெண்ணொருவரும் , ஆணொருவருமே கைது செய்யப்பட்டு நேற்று முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்களுக்கு நீதவான் பிணை வழங்கியதுடன், அடுத்த கட்ட வழக்கு விசாரணை நாளைய தினம் முன்னெடுக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணகைளை மேற்கொண்டுள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 1624322123189970762

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item