ஐ.எஸ்.இஸ்லாத்திற்கு முரணான இயக்கம்
உலமா சபை தலைமையில் 11 அமைப்புகள் கூட்டாக பிரகடனம் ஐ.எஸ்.போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளுடன் எவ...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_421.html
உலமா சபை தலைமையில் 11 அமைப்புகள் கூட்டாக பிரகடனம்
ஐ.எஸ்.போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளுடன் எவராவது தொடர்புபட்டால் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என உறுதியாக தெரிவிப்பதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து மேலும் 11 முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டுள்ளன.

இக்கூட்டுப்பிரகடனத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாஅத்துஸ் ஸலாமா, ஜம்இய்யத்துஷ் ஷபாப், அல் முஸ்லிமாத், ஐ.ஐ.ஆர்.ஓ, வாமி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. சம்மேளனம், தப்லீக் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன கையொப்பமிட்டுள்ளன.
குறிப்பிட்ட பிரகடனம் கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமைக்காரியாலயத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஐ.எஸ். ஒரு கடுமையான தீவிரவாத, இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான அமைப்பாகும்.
இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக இது காணப்படுகின்றது
மேற்குலக ஊடகங்கள் ‘ஜிஹாத் என்ற சொல்லுக்கு கொலை செய்தல் நியாயமற்ற முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழையான கருத்துக்களைப் பரப்புவதற்கு முயற்சிக்கின்றன.
எந்தவொரு அமைப்பும் ‘ஜிஹாத்’ என்ற சொல்லை அப்பாவி மக்களை கொலை செய்வதற்காக பயன்படுத்துமேயானால் அது இஸ்லாத்திற்கு அதன் போதனைகளுக்கும் முற்றும் முரணானதாகும்.
ஐ.எஸ். அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாக செயற்படுகின்ற அமைப்பு என்றும் பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், நாடுகளும் கண்டனம் வெளியிட்டுள்ளன. உலமா சபையும் கடந்த வருடம் ஐ.எஸ். அமைப்பை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன.
இஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் என்பன இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளாகும். இஸ்லாம் ஒரு தனிமனித கொலையை முழு சமூகத்தினதும் கொலையாகக் கருதுகிறது. இஸ்லாம் போதிக்கின்ற சமாதானம், அமைதி மற்றும் சகோதரத்துவம் என்பன சாதி, மத பேதமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாகும்.
இஸ்லாம் அனைத்து மனிதர்களுடனும் சமாதானமாகவும்,நீதியாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்ளுமாறே கூறுகின்றது. மேலும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுதல், அநியாயம் இழைத்தல் போன்றவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றது. கொலை, கலவரம் செய்தல், கடும்போக்கு நடவடிக்கைகள் என்பனவற்றை பெரும்பாவங்களாகவும், குற்றங்களாகவும் கருதுகின்றது.
எவராவது ஒரு தனி நபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் தண்டனை வழங்கும் படியும் நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.
எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கெதிரான தீய செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரசாங்கத்துக்கும் அரச நிறுவனங்களுக்கும் எமது உதவிகளையும், ஆதரவினையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளோம்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக நாட்டுப்பற்றுடன் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகிறார்கள்.
எமது தாய்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என உறுதியாகக் கூறுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.