லிந்துலையில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
லிந்துலை பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ந...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_378.html
லிந்துலை பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகசேன பகுதியிலுள்ள குறித்த நபர் மூன்று பாடசாலைகள் மீது நேற்று (08) பிற்பகல் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தமது பிள்ளைகள் மீது மேற்கொண்ட தாக்குதலானது சிறுவர் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலை முடிந்ததன் பின்னர் வீடு திரும்பும் போது குறித்த நபரின் வீட்டு வளாகத்திலுள்ள வெரளிக்காய்களை பறிக்க முற்பட்ட போது 11 வயதுடைய மூன்று மாணவர்களையும் பிடித்து சந்தேகநபர் அடித்ததாக பெற்றோர் கூறுகின்றனர்.
மேலும் சந்தேகநபர் லிந்துல பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுலவலகம் குறிப்பிட்டது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (09) ஆஜர்படுத்தபடவுள்ளார்.

