குர்ஆன் அவமதிப்பு வழக்கு

அடுத்த தவணைக்கு முன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்தரவு புனித குர்­ஆனை அவ­ம­தித்­த­தாக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்த...



அடுத்த தவணைக்கு முன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்தரவு

புனித குர்­ஆனை அவ­ம­தித்­த­தாக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மீது குற்றம் சுமத்தி தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கும் மற்றும் கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் நடை­பெற்ற ஜாதி­க­ ப­ல சேனா அமைப்பின் ஊடக மாநாட்­டினுள் பலாத்­கா­ர­மாக பிர­வே­சித்து குழப்பம் விளை­வித்­த­தாக ஞான­சார தேரர் மீதும் மற்றும் 6 பொது­பல சேனா அமைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கும் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­டது.

கொழும்பு கோட்டை நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் இவ்­வ­ழக்­குகள் விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சா­ர ­தே­ரரும் ஏனைய சந்­தேக நபர்­களும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

சம்­பவம் நிகழ்ந்­த­போது தொலைக்­காட்சி ஊட­கங்­க­ளினால் பதிவு செய்­யப்­பட்ட ஒளிப்­ப­திவு ஆய்­வு­க­ளுக்­காக மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் பல்­க­லைக்­க­ழகம் இது­வரை அது தொடர்­பான அறிக்­கையை அனுப்­பி­ வைக்­க­வில்லை எனவும் பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

நீதிவான் ஒளிப்­ப­திவு அறிக்­கையைப் பெற்றுக் கொண்டு அடுத்த விசா­ரணைத் தவ­ணைக்கு முன்பு குற்றப் பத்­தி­ரி­கையைத் தயா­ரிக்­கு­மாறு உத்­த­ர­விட்­ட­துடன் விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வாதிகள் தரப்பில் RRT சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

Related

தலைப்பு செய்தி 4287963781920682993

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item