அரச ஓய்வூதியர்களுக்கு விரைவில் இலத்திரனியல் அடையாள அட்டை!
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஓய்வூதியக்காரர்களுக்காக இலத்திரனியல் அடையாள அட்டையினை ஓய்வூதிய திணைக்களம் ஜூன் மாதம் முதலாம் திகதி அ...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_25.html
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஓய்வூதியக்காரர்களுக்காக இலத்திரனியல் அடையாள அட்டையினை ஓய்வூதிய திணைக்களம் ஜூன் மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்தியுள்ளதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இவ் அடையாள அட்டையில் ஓய்வூதியம் பெறுபவர், அவரில் தங்கி வாழ்பவர்கள் பற்றிய தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இவ்வட்டையின் மூலம் உள்ளூர் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் இலத்திரனியல் அடையாள அட்டையை தேர்தல் மற்றும் உத்தியோக நடவடிக்கைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாகவும் பயன்படுத்த முடியுமென ஓய்வூதிய திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. புதிய இலத்திரனியல் அடையாள அட்டை மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் நான்கு இலட்சம் ஓய்வூதியக்காரர்கள் நன்மை பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

