இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை கோரியது மன்று

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்­பி­லான இறு­தி­யான பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 10 ஆம் திகதி ...


பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்­பி­லான இறு­தி­யான பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­க­ர­வுக்கு உத்­த­ரவு பிறப்­பித்தார்.

அத்­துடன் சட்ட வைத்­திய அதி­கா­ரியை திறந்த மன்றில் சாட்­சி­ய­ம­ளிக்கச் செய்து அதனை ஒழுங்­கு­ப­டுத்­து­வது குறித்து சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் நீதிவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தெரி­வித்தார்.

றக்பி வீரரின் மரண விசா­ரணை தொடர்­பி­லான வழக்கு நேற்று தொடர்ச்­சி­யாக இரண்­டா­வது நாளும் விசா­ர­ணைக்கு வந்த போதே நீதிவான் நிஸாந்த பீரிஸ் இந்த உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்தார்.

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் வாகன விபத்தால் ஏற்­ப­ட­வில்லை எனவும் அது ஒரு கொலை என சந்­தே­கிக்கும் படி­யாக உள்­ளது எனவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று முந்­தினம் கொழும்பு மேல­திக நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தனர்.

பற்கள் உடைக்கப் பட்டு, முது­கெ­லும்பு முறிக்­கப்­பட்டு, குதி கால் பகு­தியில் உள்ள எலும்பும் உடைக்­கப்­பட்டு, கூரிய ஆயு­தத்தால் கழுத்தில் குத்­தியும், தட்­டை­யான ஆயுதம் ஒன்­றினால் தாக்­கி­ய­தாலும் றக்பி வீரரின் மரணம் நிக்ழ்ந்­தி­ருக்­கலாம் எனவும் அதற்­கான தழும்­புகள் மற்றும் அடை­யா­ளங்கள் அவ­ரது சட­லத்தில் இருந்­த­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ள­தா­கவும் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறிக்கை சமர்ப்­பித்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று முன் தினம் அறி­வித்­தனர்.

தாஜுடீன் மரணம் தொடர்பில் மரண விசா­ரணை நடத்­திய முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ரகோன் இடைக்­கால அறிக்கை ஒன்றை மாத்­தி­ரமே சமர்­பித்­த­தாக பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­துள்­ளனர்.

எனவே பூரண மரண விசா­ரணை அறிக்கை நீதி­மன்றில் சமர்­பிக்­கப்­பட வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கேட்டுக் கொண்­டனர்.

இந்த கோரிக்­கையை ஏற்றுக் கொண்டு கொழும்பு மேல­திக நீதிவான் நிஷாந்த பீரிஸ், இறு­தி­யான முழு­மை­யான மரண விசா­ரணை அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறு ஆனந்த சம­ர­கோ­னுக்கு தெரி­வித்தார்.

மேலும் தாஜூடீன் மரணம் தொடர்பில் மரண விசா­ரணை நடத்­திய நான்கு சட்ட வைத்­திய அதி­கா­ரி­க­ளையும் நீதி­மன்றில் அழைத்து சாட்சி பெற வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கோரிக்கை முன்­வைத்­துள்­ளனர்.

இதனைத் தொடர்ந்து குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்று அத­னையும் அன்­றைய தினம் மன்றுக்கு தெரியப்படுத்தும் படி நீதிவான் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related

தலைப்பு செய்தி 5320179817371267771

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item