ஐரோப்பாவில் இலங்கை மீன் இறக்குமதிக்கான தடை நீங்கும்: பிரதமர்
ஐரோப்பிய நாடுகள் இலங்கையிலிருந்து மீன்கள் இறக்குமதிக்கு தற்போது விதித்துள்ள தடையை அக்டோபர் அல்லது நவம்பரில் தடைகள் நீக்கப்படலாம் என பிரதமர் ...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_175.html
ஐரோப்பிய நாடுகள் இலங்கையிலிருந்து மீன்கள் இறக்குமதிக்கு தற்போது விதித்துள்ள தடையை அக்டோபர் அல்லது நவம்பரில் தடைகள் நீக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரிலும் நேற்று மாலை நடைபெற்ற பிரசார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் உரையாற்றிய அவர்
"ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் அடுத்த ஆட்சி அமையும் போது 10 இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைத்து கைத்தொழில் வர்த்தக வலயங்கள் பல ஏற்படுத்தப்படும். கிழக்கு மாகாணத்தின் பொருளாதரத்தை மேம்படுத்தும் வகையில் திருகோணமலையை மையப்படுத்தி பாரிய பொருளாதார வலயமொன்று ஏற்படுத்தப்பட்டு அதனை மையப்படுத்தி மட்டக்களப்பு, பொலநறுவ, அனுராதபுரம் மற்றும் வன்னி ஆகிய இடங்களிலும் கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படும்.
திருகோணமலை மாவட்டம் சம்பூரில் ஏற்கனவே இந்திய உதவியுடனான அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. சீன உதவியுடன் அந்த பகுதியில் மற்றுமோர் அனல் மின் உற்பத்தி நிலையமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்று அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மின்சகதி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தற்போது ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே பியகம பொருளாதார வலயத்தில் அனல் மின் உற்பத்தி நிலையமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் அமைந்துள்ளது" என்றார்.

