அரச செலவினங்களை 40 % ஆகக் குறைக்க பிரிட்டன் திட்டம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 % அளவுக்கு செலவினங்களை குறைக்க வழிசெய்யும் நோக்கில் திட்டமிடும்படி பிரிட்டன் அரசு தன் அதிகாரிகளைக் கேட்டுள்ளது....

அரச செலவினங்களை 40 % ஆகக் குறைக்க பிரிட்டன் திட்டம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 % அளவுக்கு செலவினங்களை குறைக்க வழிசெய்யும் நோக்கில் திட்டமிடும்படி பிரிட்டன் அரசு தன் அதிகாரிகளைக் கேட்டுள்ளது.

இந்த செலவினக் குறைப்புக்கான திட்டங்கள் யதார்த்த ரீதியில் இருக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு கூறியுள்ளது.

ஒருபுறம் 40% அளவுக்கு செலவினங்களைக் குறைக்க திட்டங்களைத் தீட்டும்படி அதிகாரிகளுக்கு கூறியுள்ள அரசு, மாற்றுத் திட்டமாக, 25% அளவுக்கு செலவுகளைக் குறைக்கும் மற்றொரு திட்டம் ஒன்றையும் முன்வைக்குமாறு கோரியுள்ளது.

அரசின் பொதுச் செலவினங்களை 31பில்லியன் டொலர்களுக்கு அதிகமாக குறைக்கும் எண்ணத்தை நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்பர்ண் அறிவித்து அதை முன்னெடுத்து வருகிறார்.

எனினும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களில் குறைப்புக்கள் இருக்காது என்றாலும் வேறு துறைகளில் செலவினக் குறைப்பு மூலம் சேமிப்புகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சொந்த நிதியாதாரங்களில் பிரிட்டன் வாழ்வது உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related

உலகம் 249343572045724200

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item