அமெரிக்க ராணுவத்தில் சிக்கன நடவடிக்கை 40 ஆயிரம் வீரர்கள் குறைப்பு
அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டு பாராளுமன்றம் கூறியுள்ளது. இதனால் ராணுவத்தில் ஆட்குறைப்பு செ...
https://kandyskynews.blogspot.com/2015/07/40_10.html
அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டு பாராளுமன்றம் கூறியுள்ளது. இதனால் ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த 2 ஆண்டில் தரைப்படையில் 40 ஆயிரம் வீரர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர்.மொத்தம் உள்ள 4,90,000 வீரர்களை 4,50,000 ஆக குறைக்கிறது
மேலும் தரைப்படையில் ஏராளமான சிவில் ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 17 ஆயிரம் பேரை குறைக்க முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்க தரைப்படையில் தற்போது 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். 2012–ம் ஆண்டு ஈராக்குடன் போர் நடந்தபோது 5 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் அமெரிக்க ராணுவத்தில் இருந்தனர்.அது படிப்படியாக குறைக்கப்பட்டு 4 லட்சத்து 50 ஆயிரம் ஆனது. இப்போது மேலும் வீரர்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதேபோல கடற்படை, விமானப்படையிலும் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர் மேலாண்மை இராணுவ இயக்குனர் பிரிகேடியர். ஜெனரல் ராண்டி ஜார்ஜ், கூறும் போது உங்களுக்கு தெரியுமா தெரியும், இதுத நம்பமுடியாத அளவிற்கு கடினமான தேர்வாவாக அமையும்.

