இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகள் மூடப்படவுள்ளன

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30 க்கு மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேட்புமன...

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகள் மூடப்படவுள்ளன
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30 க்கு மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று பிற்பகல் வேளையில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.குரூப்பு ஆராச்சி தெரிவிதார்.

அதற்கமைய, இரத்தினபுரி நகரை அண்மித்துள்ள 14 பாடசாலைகளும் கேகாலை நகரை அண்மித்துள்ள 07 பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட் கிழமை காலை 11.30 க்கு மூடப்படவுள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தினத்திற்கு மறுநாள் தொடக்கம் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வழமைபோல கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Related

தலைப்பு செய்தி 8742894334299674057

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item