13 அடுக்குமாடி கட்டிடத்தை நொடி பொழுதில் தரைமட்டமாக்கிய சம்பவம்: பிரமிக்க வைக்கும் வீடியோ

அமெரிக்காவில் புதிதாக ஹாக்கி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த ஹொட்டலை வெடி வைத்து தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகி பிரமிப்பை ஏற...

america_buildingcollapse_002
அமெரிக்காவில் புதிதாக ஹாக்கி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த ஹொட்டலை வெடி வைத்து தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Detroit நகரில் பார்க் அவெனியூ என்ற ஹொட்டல் கடந்த 91 வருடங்களாக இயங்கி வந்துள்ளது.
இந்த ஹொட்டல் உள்ள இடத்தில் 450 மில்லியன் டொலர்கள் செலவில் தற்போது புதிதாக Detroit Red Wings என்ற ஹாக்கி விளையாட்டு அரங்கம் கட்ட உள்ளதால், இந்த ஹொட்டலை இடித்து தரைமட்டமாக்க அரசு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து, நேற்று சுமார் 90 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை ஹொட்டலின் அடியில் வைக்கப்பட்டு வெடிக்க செய்தனர்.

வெடிமருந்து வெடிக்கப்பட்டதும் 13 அடுக்கு மாடிகள் மற்றும் 252 அறைகள் கொண்ட அந்த ஹொட்டல், கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
முன்னதாக, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் வசித்து வந்த மக்களை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
கட்டிடம் இடிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக அமைக்க உள்ள ஹாக்கி விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப்பணி முழுவீச்சில் தற்போது நடைப்பெற்று வருகிறது.

Related

உலகம் 4416369979171138093

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item