தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 135 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 135 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவி உயர்வ...

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 135 முறைப்பாடுகள் பதிவு
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 135 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் என்பன தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான 72 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சி படுத்துதல் தொடர்பில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பொருட்கள் பகிர்ந்தளித்தமை குறித்து 13 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அரச வளங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை குறித்து 08 முறைப்பாடுகளும், அரச அதிகாரிகளை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளது.

இதனிடையே பொதுத் தேர்தல் குறித்து 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தேர்தல் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவினர் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 8263764818145837225

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item