பெண்களின் தலையை வெட்டிய ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறிச்செயல்!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலை வெறிச்செயலால் சிரியாவில் முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் தலையை ...

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலை வெறிச்செயலால் சிரியாவில் முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.சிரியா மற்றும் ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரம், தொடர்ந்து உச்சகட்டத்தை எட்டிவருகிறது உலக நாடுகளிடையே பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வந்தாலும், தீவிரவாதிகள் கை ஓங்கிய வண்ணமே உள்ளது. அமெரிக்க படைக்கு எதிராக போரிட்டு மற்ற நகரங்களையும் தங்களது பிடியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொண்டு வருகின்றனர். இதில் சிக்கும் நகரங்களின் பொதுமக்கள் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளிநாட்டை சேர்ந்தவர்களையும், உளவு பார்ப்பவர்களையும் கொடூரமாக கொலை செய்து, அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கியவர்களின் தலையை வெட்டியும், ஒரே கயிறால் பலரது கழுத்தை நெரித்தும், தண்ணீருக்குள் மூழ்கடித்தும், தீ வைத்து எரித்தும், காரில் மொத்தமாக வைத்து வெடிகுண்டை வெடிக்க செய்தும் கொலை செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

தொடர்ந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கொடூரம் உச்சத்தை அடைந்து வருகிறது. உளவு பார்ப்பவர்கள் என்று குற்றம் சாட்டி பலரை, நடு ரோட்டில் தலையை வெட்டியும், மின்கம்பங்களில் கட்டிவைத்து கொன்றும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர். பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது சிரியாவின் தீர் இஸ்ஸோர் மாகாணத்தில் இரண்டு பெண்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தலையை வெட்டி கொலை செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண்களை இதுபோன்று கொலை செய்வது என்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த கொலைச் சம்பவமானது கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று இருக்கிறது. இருபெண்களும் அவர்களது கணவர்களோடு கொலை செய்யப்பட்டு உள்ளனர். இரு தம்பதியினரும் பில்லி, சூனியம் வைத்ததாக குற்றச்சாட்டு வந்ததையடுத்து கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று இங்கிலாந்து நாட்டில் உள்ள கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.

Related

உலகம் 7248667505929401050

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item