அரசியலில் அநாதையாக தனித்து விடப்படுகின்றார் மகிந்த?
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள ஊ...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_932.html
கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள ஊடகம் ஒன்றின் செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகரின் அரசியல் பிரியாவிடை வைபவம் எதிர்வரும் ஏழாம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்காக சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. அச்சந்தர்ப்பங்களில் சபாநாகர் என்ற வகையில் சமல் ராஜபக்ச கடும் சிரமங்களுக்கு மத்தியிலும் பணியாற்றினார்.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஓய்வு பெறப்போவதாக முதலில் சமல் ராஜபக்சவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் இன்னொரு சகோதரரான பசில் ராஜபக்ச அரசியலில் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். அடுத்து சமல் ராஜபக்சவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்மையானது மகிந்த ராஜபக்ச அரசியலில் அநாதையாக தனித்து விடப்படவுள்ளார் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

