நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவை தொடரும்: மேனக ஹரன்கஹா

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்படாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட ...


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்படாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேனக ஹரன்கஹா தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்ட ஏற்பாடுகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அதுவரை இருந்த பிரதமரும் அமைச்சரவையும் தொடர்ந்தும் ஆட்சி நடத்தும். தேர்தல் நடந்து முடிந்த பின்னர், பிரதமர் உட்பட அமைச்சரவையின் செயற்பாடுகள் முடிவுக்கு வரும் என அரசியலமைப்புச் சட்டத்தின் 48 (1) குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் முடியும் வரை பிரதியமைச்சர்களும் பதவிகளை வகிக்க முடியும்.

எவ்வாறாயினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், பிரதமர் அல்லது அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட ஏற்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 48 (2) மற்றும் 48 (3) ஆகிய பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 8875320849786096270

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item