மஹிந்த வெற்றிலை சின்னத்தில் வருவது உறுதி: வாசுதேவ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம்...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_922.html
ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்றாலும் நாங்கள் யாரும் யாருக்கும் அடிபணியவில்லை.
மஹிந்த ராஜபக்ச எங்கள் தலைவர் என்ற ரீதியில் அவரை இந்நாட்டு பிரதமராக்குவதற்காக மக்கள் ஒன்று கூடியுள்ளார்கள்.
கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்தவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என பலருக்கு சந்தேகம் இருந்தது. அவர் கூட்டணியின் ஆலோசகர், அப்படி என்றால் அவருக்கு எப்படி சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கும்.
எனவே கூட்டணியில் வெற்றிலை சின்னத்தில் அவருக்கும் எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பது உறுதி என்பதனை நான் கூற விரும்புகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

