மஹிந்த ஜாதிக பலயவில் களமிறங்க திட்டம்! அரசியலை விட்டு ஓடும் பசில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத பட்சத்திலேயே மஹிந்த இவ்வாறு ஸ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கவுள்ளார்.

தேசபிரேமி ஜாதிக பெரமுன என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த கட்சியே ஶ்ரீலங்கா ஜாதிக பலயவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் நெருங்கிய சகாவான பியசிறி விஜேநாயக்காவே இக்கட்சியின் செயலாளராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் தேசியப் பட்டியல் ஊடாகவும் வரப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு கூட்டணியில் வேட்புரிமை வழங்கப்படும் எனவும் பசில் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 6975187797954514332

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item