இந்திய அணியில் ஏற்பட்ட குழப்பம்: கோஹ்லி கருத்தால் வெடித்த சர்ச்சை
வங்கதேச தொடரில் இந்திய அணி வீரர்களிடம் முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதாக விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_653.html
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி தோற்றதால் அணித்தலைவர் டோனி மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்தது.
இதனால் அவர் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அஸ்வின், ரெய்னா ஆகியோர் டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்திய அணி பிளவு பட்டிருப்பதாகவும், வீரர்களுக்கு இடையே மோதல்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ள கருத்து இந்திய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் இருக்கிறது.
கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோஹ்லி, இந்திய வீரர்கள் தெளிவற்ற மனநிலையில் இருந்தனர். அதனால் தான் முழுத்திறமையை வெளிப்படுத்தவில்லை.
அதே சமயம் வங்கதேச வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய அணி வீரர்களிடம் முடிவெடுப்பதில் ஏற்பட்ட குழப்பத்தினால் தான் தோல்வி அடைந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

