மஹிந்தவுக்கு எதிராக புதிய கூட்டணி? ஜாதிக ஹெல உறுமய

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேட்பாளராக போட்டியிடும் எந்த ஒரு கூட்டணியிலும் இணையாமல் இருப்பதற்கு ஜாதிக ஹெல...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேட்பாளராக போட்டியிடும் எந்த ஒரு கூட்டணியிலும் இணையாமல் இருப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்சவினர் மீண்டும் வருவதனை தடுப்பதற்கான அனைத்து அரசியல் செயற்பாடுகனையும் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியாவது பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால் அதற்கு எதிரான கூட்டணி ஒன்றை கட்டியெழுப்புவதற்கு ஜாதிக ஹெல உறுமய தற்போது வரையில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தேற்கடிப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய பாரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 5336593995660663147

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item