குட்டி இளவரசர் ஜார்ஜை போல் தோற்றமளிக்கும் சிறுவன்: தீயாய் பரவும் புகைப்படங்கள்

பிரித்தானிய குட்டி இளவரசரான ஜார்ஜை போல் சிறுவன் ஒருவனின் புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. Reddit என்ற சமூக வலைத்தள...

same_george_001
பிரித்தானிய குட்டி இளவரசரான ஜார்ஜை போல் சிறுவன் ஒருவனின் புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Reddit என்ற சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படத்தில், சிறுவன் ஒருவன் இளவரசர் ஜார்ஜை போல் பொன்னிற முடி, நிறம், சிரிப்பு மற்றும் முகத்தோற்றத்துடன் காணப்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
TheGGongShow என்ற இணைய முகவரியிலிருந்து அந்த சிறுவனின் பாட்டி இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, ’எனது பேரன் அரசு குடும்பத்து இளவரசன் போலவே உணர்வதாக’ குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த சிறுவன் எங்கு இருக்கிறான், என்ன பெயர் என்ற எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.
இணையத்தில் பரவும் இந்த புகைப்படத்தை பலர் ‘இது குட்டி இளவரசர் ஜார்ஜை போலவே’ உள்ளது என ஏற்றும் மறுத்தும் வருகின்றனர்.


குட்டி இளவரசர் ஜார்ஜை போல் தோற்றமளிக்கும் சிறுவர்களின் புகைப்படங்கள் வெளியாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
கடந்த ஏப்ரல் மாதம் இளவரசர் ஜார்ஜை போலவே நடை, உடை, பாவனை கொண்ட Tommy Cox என்ற 2 வயது சிறுவனின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரித்தானிய மக்களின் பார்வையில் மிக பிரபலம் அடைந்ததால், அந்த சிறுவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பல பேர் அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று வருவதாக தகவல்கள் வெளியானது.
குட்டி இளவரசரின் தாயாரின் பெயர் கேட் மிடில்டன்(Kate Middleton) என்பது அனைவருக்கும் தெரியும்.
இதில் இன்னொரு அதிசயமான தகவல் என்னவென்றால், Tommy Cox என்ற அந்த சிறுவனின் தாயாரின் பெயரும் கேட்(Kate) தான்.

Related

உலகம் 6511572355104421348

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item