இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி இந்திய பிரஜைகள் மதுரையில் கைது
இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்தை சென்றடைந்த 11 இந்திய பிரஜைகளிடம் இருந்து 604 கிராம் தங்கம் மற்றும் 35 வெளிநாட்டு மதுபான போத்தல்...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_536.html
24 கரட் தங்கத்தில் செய்யப்பட்ட தங்கச் சங்கிலிகள் இந்த சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எதிராக சுங்க அதிகாரிகள் இந்திய சுங்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
மிஹின் லங்கா விமானத்தில் சென்று இறங்கிய இந்த 11 பேர் மீது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவர்களில் 7 பேர் தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்துடன் ஏனையோரிடம் சுங்க வரி செலுத்தாமல் எடுத்து வரப்பட்ட 35 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் இருந்துள்ளன.
மதுபானத்தின் பெறுமதி 35 ஆயிரம் இந்திய ரூபா எனவும் தங்கத்தின் பெறுமதி 16 லட்சத்து 55 ஆயிரம் என உதவி சுங்க ஆணையாளர் எம். சந்திரசேகரன் தெரிவித்தார்.

