பின்லேடன் மரணம்: அமெரிக்கா- பாகிஸ்தான் இணைந்து அரங்கேற்றிய நாடகம்

அல் கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டது பாகிஸ்தானும்- அமெரிக்காவும் இணைந்து அரங்கேற்றிய நாடகம் என பிரித்தானிய செய்தியாளர் ஜேன் க...

bilnladen_002
அல் கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டது பாகிஸ்தானும்- அமெரிக்காவும் இணைந்து அரங்கேற்றிய நாடகம் என பிரித்தானிய செய்தியாளர் ஜேன் கார்பின் கூறியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க சிறப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
பின்லேடனின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர்தான் பின்லேடன் குறித்து அமெரிக்காவுக்கு தகவல் அளித்தாகவும், பாகிஸ்தானின் அனுமதியின் பேரிலேயே அவரை சுட்டுக்கொன்றதாகவும் சமீபத்தில் அமெரிக்க புலனாய்வுச் செய்தியாளர் ஸீமோர் எம் ஹெர்ஷ், கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் அல் கொய்தா குறித்தும், பின்லேடன் குறித்தும் 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வரும் பிரித்தானிய செய்தியாளர் ஜேன் கார்பினை மேற்கோள் காட்டி “பிபிசி’ தெரிவித்துள்ளதாவது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புதான் அப்போட்டாபாத் இல்லத்தில் பின்லேடனை ஆறு ஆண்டுகளாக சிறை வைத்திருந்தது.
அதன் பிறகு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு, அதிரடி நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதைப் போல இரு நாடுகளும் உலகை நம்பச் செய்தன.
இவ்வாறு இரு நாடுகளும் நாடகமாடியதற்கு, பாகிஸ்தான் ராணுவத்திலும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிலும் உள்ள ஒரு பிரிவினர் பின் லேடனுக்கு ஆதரவு அளித்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், பின்லேடன் பாகிஸ்தானில் வசித்திருக்க முடியாது என ஜேன் கார்பின் கூறியதாக “பிபிசி’ தெரிவித்துள்ளது.

Related

உலகம் 4448975863111866231

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item