சுற்றுலா பயணிகளின் இதயமற்ற செயல்: தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்துகொண்ட அவலம்
டுனிசியா கடற்கரையில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த வெள்ளியன்று டுனிசியா கடற்கரையில் நடை...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_304.html
கடந்த வெள்ளியன்று டுனிசியா கடற்கரையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 38 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்நிலையில் தாக்குதலில் பலியானவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மலர்வளையம் வைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
மேலும் சிலர் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக கடற்கரையில் ஊர்வலம் சென்றனர். முன்னதாக சில சுற்றுலா பயணிகள் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் செல்பி எடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
அதில் ஒரு புகைப்படத்தில் ஆண் ஒருவர் இரண்டு பெண்களுடன் தாக்குதல் நடந்த இடத்தின் முன் சிரித்தபடி செல்பி எடுப்பது போல் உள்ளது.
இந்நிலையில் இந்த புகைப்படங்களுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும் சிலர். இது இதயமற்ற செயல் என்றும் , தற்போதைய தலைமுறையினர் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதையும் நிறுத்திகொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

