மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப் போவதில்லை! மைத்திரி அதிரடி

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...


பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் ஒருபோதும் வேட்புமனு வழங்கப்போவதில்லை என்றும் தேசியப் பட்டியல் ஊடாக நியமனத்தை வழங்கவும் தான் தயாரில்லை என்றும் மைத்திரி உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் நேற்று முழு நாளும் பேச்சு நடத்தியுள்ளார்.

இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக, சந்திப்பில் கலந்துகொண்ட இடதுசாரி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, சு.கவின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோருடனும் ஜனாதிபதி நேற்று மாலை பேச்சு நடத்தியுள்ளார்.

தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஆசனப் பங்கீடு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளன. அத்துடன், சுசில் பிரேமஜயந்த மஹிந்த அணியில் இணையவுள்ள விவகாரம் பற்றியும் அங்கு பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட ஆறு பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு தனது அறிக்கையை இன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளது.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்ப்பில் மஹிந்த போட்டியிட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பான உத்தியோகபூர்வை அறிவிப்பை மஹிந்த நாளை வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

தலைப்பு செய்தி 6678347987461939693

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item