அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இலவசமாக WiFi வசதியை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்ந...

அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
நாட்டிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இலவசமாக WiFi வசதியை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்திலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இலவச WiFi வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் திட்ட முகாமையாளர் கவஸ்கர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மருதானை வர்த்தக நிலையம் ஆகிய இடங்களில் இலவச WiFi வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நூற்றுக்கும் அதிகமான வரத்தக நிலையங்களில் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கவஸ்கர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் 1000 வர்த்தக நிலையங்களில் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையத்தின் திட்ட முகாமையாளர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்ககைள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 7488291493755401058

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item