திருமாவளவனின் தனிப்பட்ட செயலாளர் வெட்டிக் கொலை
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் இன்று காலை சென்னை மடிப்பாக்கத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்ன...
https://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_85.html
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தவர் வெற்றிச்செல்வன். அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் தனிப்பட்ட செயலாளராகவும் இருந்தார்.
அவரை மடிப்பாக்கத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை தொடர்பிலான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

