மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் மரணம்

கால்பந்து போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிக...


கால்பந்து போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

21 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியில் இடம்பெற்றிருந்த துடிப்பான வீரர் கிரிகோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்டிகளிலே விளையாடியிருந்தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கிளப் அணிக்காக சுமார் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். இவர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிசர்வ் அணி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே டாக்டர்கள் விரைந்து சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோமா நிலைக்கு சென்ற அவருக்கு உயிர்காக்கும் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறியதையடுத்து, செயற்கை சுவாசத்தை நிறுத்த உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால், நேற்று மாலை அவர் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு லோகிரன் கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு வீரர்களும் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related

விளையாட்டு 5846164548039387683

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item