பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று (10) முதல் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொ...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று (10) முதல் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பிலிருந்து, பதுளை, மாத்தறை, அனுராதபுரம், காலி, மஹவ ஆகிய பயண முடிவிடங்களுக்கான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்மூலம் சுமார் 50 ரயில் போக்குவரத்து சேவைகள் கால அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விடுமுறையில் செல்வதற்கும், மீண்டும் தலைநகர் திரும்புவதற்கும் ரயில்வே திணைக்களத்தினால் இந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ரயில் சாரதிகள், உதவியாளர்கள் உட்பட ரயில் போக்குவரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினருக்கும் இந்த காலப்பகுதியில் சேவையாற்றுவதற்கு முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

Related

இலங்கை 1611711549749654594

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item