தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிராக வழக்குத் தொடர்வதில் சிங்கள ராவய தீவிரம்!

தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான வழக்குத...

தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் வழக்குத் தொடர்வதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அனுமதி வழங்கிய தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படவுள்ளது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது. அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக வழக்குத் தொடரவில்லை. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேசிய கீதம், அதன் மெட்டு, தேசிய கொடி போன்றவற்றில் திருத்தங்கள் செய்ய முடியாது என தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 4191591299516392220

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item