எஸ்.பி திஸாநாயக்க அரங்கேற்றும் புதிய அரசியல் நாடகம்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஒரே மேடைக்கு அழைத்து ஸ்...


முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஒரே மேடைக்கு அழைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒற்றுமையை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை ஒரு பொழுதும் கைவிட போவதில்லை என அமைச்சர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மூன்று பேரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் அவா. அப்பொழுது தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

அதற்காக இம்மூன்று பேரும் ஒரே மேடையில் கைக்கோர்த்துக்கொள்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை எஸ்.பி.திஸாநாயக்க, ராஜபக்ச ஆட்சியில் அரச பயங்கரவாதியாக செயற்பட்டவர்.

அப்போதைய உயர் கல்வி அமைச்சராக இருந்த அவர் பல்கலைக்கழக மாணவர்களின் தலையை உடைக்க வேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தார்,அவ்வாறான ஒருவரை மீண்டும் நல்லாட்சியில் இணைத்து நல்லாட்சியாளர்கள் திருத்த முடியாத தவறை இழைத்துள்ளனர்.

அன்று சந்திரிக்காவை நிர்வாணமாக வீதியில் ஓடவிடவேண்டும் என கருத்து வெளியிட்ட எஸ்.பி இன்று நல்லாட்சியின் மடியில் அமர்ந்திருப்பது குறித்து மக்கள் அதிருப்தி நிலையிலேயே உள்ளார்கள்.

வெறுமனே அரசியல் இலாபங்களுக்காக மாத்திரம் செயற்படும் இவ்வாறான அமைச்சர்கள் கட்சியை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவிப்பது நகைச்சுவையானது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதையும் விட நகைச்சுவையானது எதுவெனில் கடந்த அரசாங்கத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் முடிந்தளவு வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட எஸ். பி.திஸாநாயக்க, தற்பொழுது சந்திரிக்காவுக்கு ஆதரவாக கருத்து வெளியிடுவதாகும், எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 6960471120287429633

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item