ஸ்வீடனிலிருந்து குரங்குகளைப் பெற சவுதி அரேபியா மறுப்பு
ஸ்வீடனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே நிலவும் ராஜதந்திர மோதல் காரணமாக, ஸ்வீடன் மிருகக்காட்சிசாலையிலிருந்து நான்கு சிறிய அமேசோனியன் வக...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_318.html
ஸ்வீடனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே நிலவும் ராஜதந்திர மோதல் காரணமாக, ஸ்வீடன் மிருகக்காட்சிசாலையிலிருந்து நான்கு சிறிய அமேசோனியன் வகை குரங்குகளைப் பெற்றுக்கொள்ள சவுதி அரேபியா மறுத்துள்ளது.
ஸ்கான்ஸ்கென் மிருகக்காட்சி சாலையிலிருந்த மிகச்சிறிய குரங்கு இனத்தைச் சேர்ந்த இவை ரியாத்திலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு செல்லவிருந்தன.
அரசியல் சூழல் காரணமாக அவர்களுக்கு அந்தக் குரங்குகள் தேவையில்லை என்று கூறப்பட்டதாக ஸ்கான்ஸ்கென் மிருகக்காட்சிசாலையின் தலைவர் ஜொனாஸ் வாட்ஸ்ட்ராம் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஸ்வீடன் கருத்து வெளியிட்டதை அடுத்து, கடந்த மாதம் அந்த நாட்டுக்கான தமது தூதரை சவுதி அரேபியா திரும்ப அழைத்துக்கொண்டது.
இதையடுத்து சவுதிக்கான ஆயுத விற்பனையை ஸ்வீடன் நிறுத்தியது.
இப்போது உலகில் மிகவும் சிறிய வகை குரங்குகளை ஸ்வீடனிலிருந்து பெற்றுக்கொள்ள சவுதி அரேபியா மறுத்துள்ளது.
அந்தக் குரங்குகள் ஒவ்வொன்றும் 100 கிராம்களுக்கு சற்று கூடுதலான எடை கொண்டவை.