இந்திய சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்ட நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சுவாமிஜி ஸ்ரீ செல்வம் சித்தர் என்று அழைக்...

அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்ட நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சுவாமிஜி ஸ்ரீ செல்வம் சித்தர் என்று அழைக்கப்படும் அண்ணாமலைக்கு வயது 49. இவர் அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் ஹிந்து கோவில் ஒன்றை தனது தலைமையில் நிர்வகித்து வந்தார். பக்தர்களுக்கு வழங்கப்படும் ஆன்மீக சேவைகளுக்கு பணம் வசூலிப்பதை அண்ணாமலை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.கோவிலுக்கு நேரடியாக வர முடியாத பக்தர்கள் சிலர், அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்மீக ஆலோசனைகளை கேட்பதுடன், சில புனிதப் பொருள்களையும் விலைக்கு வாங்குவர். இதற்காக, அவர்களது கடன் அட்டை (கிரெடிட் கார்டு) எண்ணை கேட்டுப் பெற்று, அதில் இருந்து அண்ணாமலை பணம் எடுத்துக் கொள்வர்.பக்தர்கள் ஒருமுறை தனது கடன் அட்டை விவரங்களைக் கூறி விட்டால் போதும். அடுத்தமுறை அவராகவே எந்தவித அனுமதியும் இன்றி பணம் எடுத்துவிடுவார்.

இது போன்ற அடுக்கடுக்கான மோசடிப் புகார்கள் குறித்து ஜார்ஜியா மாவட்டம் விசாரணை நடத்தியது. இதில் அண்ணமாலை குற்றவாளி என்பதை உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Related

உலகம் 5074949129755854254

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item