சட்டவிரோத சுரங்கத்தில் கிடைத்த 200 கோடிக்கும் மேல் பெறுமதியான நீல இரத்தினக்கல்
அவிசாவளை நீதிமன்றத்திற்கு உட்பட்ட பரக்கடுவ போஹரபாவ ஹிந்தல என்ற பிரதேசத்தில் சட்டவிரோத இரத்தினகல் சுரங்கத்தில் இருந்து 200 கோடி ரூபாவுக்கும...
https://kandyskynews.blogspot.com/2015/04/200_16.html
இந்த இரத்தினக்கல்லை அகழ்ந்து எடுத்த தரப்பினரும் அதனை கொள்வனவு செய்த இரத்தினக்கல் வர்த்தகரும் தலைமறைவாகியுள்ளனர்.
குறித்த நீல இரத்தினக்கல் கிழங்கு ரொட்டி ஒன்றின் அளவை போல் இருக்கும் என சுரங்கத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கல் 18 கோடி ரூபாவுக்கு குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத இரத்தினக்கல் சுரங்கத்தை வைத்திருப்பது அதில் எடுக்கப்பட்ட இரத்தினக்கல்லை கொள்வனவு செய்வது சட்டவிரோதம் என்பதால், வர்த்தகரும் , மாணிக்கக்கல் சுரங்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களும் இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

