கருணா மீது காட்டேரி பாய்ந்தது !
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கருணா போகக் கூடாத ஒரு இடத்திற்குச் சென்று வசமாக மாட்டிக்கொண்டார். மூத்த சிங்கள ஊடகவியலாளர...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_3.html
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கருணா போகக் கூடாத ஒரு இடத்திற்குச் சென்று வசமாக மாட்டிக்கொண்டார். மூத்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் 26.02.2015 அன்று கருணாவை TV ல் பேட்டி கண்டு கிழி கிழி என்று கிழித்துவிட்டார். பாலியல் தொடர்பு உண்டா ? பாலியல் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் மனைவி பிள்ளை குட்டிகள் எங்கே இருக்கிறார்கள் என்று எல்லாம் கேள்வி கேட்க்க கருணாவின் முகம் கோபத்தால் புடைக்கிறது. ஒரு கட்டத்தில் உங்கள் இணையற்ற தலைவர் பிரபாகரன், பின்னர் மகிந்த ராஜபக்ஷ என்றீர்கள் , இப்போது உங்கள் கட்சி தலைவர் மைத்திரி , இப்ப என்ன நினைக்கிறீர்கள் என்று எல்லாம் எடக்கு முடக்கான கேள்விகளை தொடுத்துள்ளார்.
அவர் சிங்களத்தில் கேட்க்க ஒரு மொழிபெயர்பாளர் கருணாவுக்கு தமிழில் விபரித்து , கருணா சொல்லும் பதிலை சிங்களத்தில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் அந்த மொழிபெயர்பாளர் கூட , கருணாவிடன் கேட்க்க கூச்சப்படும் கேள்விகளை அந்த சிங்கள ஊடகவியலாளர் கேட்டுள்ளார். 5 பாகங்களாகக் கொண்ட நீண்ட நேர வீடியோ அது. அதனை சுருக்கி அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே தந்திருக்கிறோம். கருணா மீது காட்டேரி மோதினால் எப்படி இருக்கும் ? அது தான் இது ...

