ஈராக்கின் டிக்ரிட் மற்றும் சிரியாவின் எல்லை நகரம் ராஸ் ஆல் இன் ஐ மீட்கக் கடும் சண்டை
ISIS போராளிகளிடம் இருந்து ஈராக்கின் டிக்ரிட் ஐ மீட்க விமானப் படை, ஃபெடரல் போலிஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஷியா போராளிகள் மற்றும் சுன்னி பழங்க...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_198.html
இதில் சுமார் 30 000 துருப்புக்கள் வரை ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஈராக் படைகள் முற்றுகையிட்டுள்ள டிக்ரிட் பகுதியில் ISIS போராளிகள் ஆயிரத்துக்கும் குறைவாகவே இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது.
ISF என அழைக்கப் படும் ஈராக்கின் பாதுகாப்புப் படையினர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 இற்குள் அமெரிக்காவிடம் இருந்து $20 பில்லியன் டாலர் பெறுமதியான இராணுவ உதவியைப் பெற்றிருந்தது. இது உபகரணம், முகாம்கள் மற்றும் பயிற்சி அடிப்படையிலான உதவியாகும். இத்தனை உதவி கிடைத்த போதும் தனியாக ISIS ஐ எதிர்த்து வெற்றி பெற இயலாத சூழலிலேயே ஈராக்கியப் படைகள் உள்ளன. 2003 இல் அமெரிக்கப் படைகள் ஈராக் சர்வாதிகாரி சதாம் ஹுசைனைப் பதவி இறக்கி மரண தண்டனை அளித்த பின் ஈராக்கிய இராணுவத்தைக் கலைத்த நடவடிக்கையினால் தான் ஈராக்கியப் படைகள் பலவீனம் அடைந்ததாகவும் சில தரப்பினர் கூறுகின்றனர்.
மறுபுறம் வடகிழக்கு சிரியாவில் சர்ச்சைக்குரிய எல்லை நகரமான ராஷ் அல் ஐன் இனைத் தாம் கடுமையான முற்றுகைத் தாக்குதலுக்குப் பின்னர் ISIS போராளிகள் வசமிருந்து கைப்பற்றியிருப்பதாக இன்று வியாழக்கிழமை குர்துப் படையினர் அறிவித்துள்ளனர். ஆனாலும் அதே வரிசையில் குறித்த ஹஸாக்கேஹ் மாகாணத்தில் இன்னொரு முக்கிய நகரான டல் டாம்ர் இல் தமது நிலையைத் தாம் பலப்படுத்தி உள்ளதாக ISIS போராளிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. டால் அம்ர் யுத்தத்தில் 22 குர்துக்களும் குறைந்தது 18 ஜிஹாதிஸ்ட்டுக்களும் கொல்லப் பட்டுள்ளதாகவும் ராஸ் அல் ஐன் சண்டையில் 10 இற்கும் அதிகமான போராளிகள் கொல்லப் பட்டிருப்பதாகவும் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

