இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்படவில்லை!
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி வெளியிட்ட ...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_86.html
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி வெளியிட்ட தகவலை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது. இந்த தடை நீக்கம் தொடர்பில் எவ்வித செய்தியும் தமக்கு கிடைக்கவில்லை என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை மீது விதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடை இன்னமும் அமுலில் உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.எனினும் இந்த விடயத்தில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

