அவுஸ்திரேலியாவுடன் மஹிந்தவின் மர்ம உறவு! அம்பலப்படுத்தும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட்டுடன் பேணிய நெருங்கிய தொடர்புகள் மர்மமானவை என பிரதமர் ரணில் விக்கிரமச...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_829.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட்டுடன் பேணிய நெருங்கிய தொடர்புகள் மர்மமானவை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியின் போது பாதுகாப்புத் தரப்பினரின் விசேடமாக கடற்படையினரின் ஒத்துழைப்புடன் ஆட்கடத்தல்கள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கள் செல்வதைத் தடுப்பதற்கு அவுஸ்திரேலிய ரோனி அபொட் அரசாங்கம், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இதுவே பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
”த அவுஸ்திரேலியன்” ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போது இந்த கருத்தினை ரணில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டத்தைக் கண்டு அவுஸ்திரேலியா மௌனம் காத்து வந்தது. இது குறித்து சிறிலங்கா மக்களுக்கு அவுஸ்திரேலியா மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அவுஸ்திரேலியா மட்டுமன்றி உலகின் ஏராளமான நாடுகள் சிறிலங்காவில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பாக மௌனம் காத்து வந்ததாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் அமைச்சர் ஸ்கொட் மொரிசன் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதை அவர் நிராகரித்ததாகவும், இதன்போது அவர் இராஜதந்திர நடைமுறையைப் பின்பற்றத் தவறிவிட்டார்.
இதனால் அமைச்சர் கொட் மொரிசன் மீது மக்களுக்கு இருந்த கௌரவமான மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், இதற்காக தாம் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை. கடந்த கால நிகழ்வுகளின் மூலம் அவுஸ்திரேலியா படிப்பினையைப் பெற்றுக்கொண்டிருக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


