அவுஸ்திரேலியாவல் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நீதிமன்ற விசாரணை

இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிம...


Asylumஅனுமதியில்லாமல் நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள் தொடர்பிலான சட்ட திட்டங்களை மாற்றப் போவதில்லையென இலங்கையின் புதிய ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், இது பற்றிய அறிவித்தல் வெளியாகிறது.
இம்மாத முற்பகுதியில் கொக்கோஸ் தீவின் வடமேற்கு கடற்பரப்பில் நான்கு இலங்கையர்களுடன் படகொன்று இடைமறிக்கப்பட்டது. இந்தப் படகில் இருந்தவர்களை அவுஸ்திரேலிய கரையோர காவற்படையினர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தது.
இந்த நால்வரினதும் புகலிடக் கோரிக்கைகள் குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடுக்கடலில் விசாரித்தார்கள். இவர்கள் எப்போது இலங்கையை அடைவார்கள் எனத் தெரியவில்லையென்று கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாம் நாடு திரும்பிய இடத்தில் இருந்து நேரடியாக சிறைச்சாலைக்கு அல்லது நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்று குற்றஞ்சுமத்தப்படும்.
நாடு திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையை மாற்றும் உடனடி நோக்கம் எதுவும் கிடையாதென இலங்கை அரசாங்கத்தின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ சமீபத்தில் கூறியிருந்தார்.

Related

உலகம் 3879974039340585673

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item