இஸ்லாமிய தீவிரவாதிகளின் தளபதி கொல்லப்பட்டார்
அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதல் சம்பவத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவின் ஆப்கானிஸ்தானிய கிளையின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மு...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_769.html
முல்லா அப்துல் ரஃப் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், பயணித்த வாகனம் மீதே விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவருடன் மேலும் 6 பேர் வட ஹெல்மன்ட் மாகாணத்தில் உள்ள பாலைவனம் ஒன்றின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் ஆயுதம் மற்றும் தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை வெடித்துச் சிதறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் முன்னர் தாலிபானின் தளபதியாக செயல்பட்டவர் எனவும், கடந்த மாதத்திலேயே இஸ்லாமிய தீவிரவாதிகளின் தளபதியாக பதவிப் பிரமாணம் பெற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

