சிரந்தி ராஜபக்சவின் மேலும் ஒரு மோசடி? இம்முறை வங்கிக் கணக்கு
தொடர்ச்சியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி தொடர்பு பட்டுள்ள மோசடி விடயங்களும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்நிலையில் அவ...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_74.html
குறித்த வங்கிக் கணக்கின் முகவரியாக ராஜபக்ச குடும்பத்தின் இல்லமான தங்கல்ல, கார்ல்டன் ஹவுஸ் முகவரியே வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் சிரந்தி ராஜபக்சவின் தேசிய அடையாள அட்டை இலக்கம் 222222222V எனவும் மேலும் ஒரு உத்தியோகபூர்வ பாவனையாளரான குமாரி என்பவரது அடையாள அட்டை இலக்கம் 111111111V எனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு அனுமதியுள்ள பாவனையாளரான திசாநாயக்க என்பவருக்கு 587060958V எனும் அடையாள அட்டமும் வங்கிக் கணக்கு விபரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் இரண்டு நபர்களது அடையாள அட்டை இலக்கங்கள் போலியானது என்பதோடு குறித்த வங்கிக்கணக்கில் 48.3 மில்லியன் ரூபா வைப்பிலிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


