அண்ணனோ மன வேதனையில்... தம்பியோ சுகபோகத்தில்...!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தேல்வியடைச் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பியோடிய பசில் ராஜபக்ஷ, சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டு...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_72.html
அண்ணன் மஹிந்தவையும், கட்சியினரையும் ஏமாற்றியதுடன் நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்த பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்,
மஹிந்த ராஜபக்ஷ சிறந்த அரசியல்வாதி திறமையானவர். பலசாலி அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையை மூடி மறைக்க மாட்டேன். ஆனால் முன்னாள் ஜனாதிபதி தோல்வி கண்டு வீட்டுக்கு போக முக்கிய காரணம் பஷில் ராஜபக்ஷ ஆவார். பஷில் ராஜபக்ஷ எனது தந்தையின் நல்ல நண்பர்.
ஆனால் கடந்த ஆட்சியில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார். மக்கள் பிரதி நிதிகளை மக்களுக்கு சேவை செய்ய விடாது தடுத்தார். அடக்கு முறையை மேற்கொண்டார் என்பதை சுதந்திரக் கட்சியினரான நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முதன்மையானவர் பஷில் ராஜபக்ஷ.இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை நடுத்தெருவில் கைவிட்டு மக்களையும் நடுத்தெருவில் கைவிட்டு அமெரிக்காவுக்கு தப்பிச்சென்று சுகபோகமாக வாழ்க்கை நடத்துகின்றார்.
கடந்த ஆட்சியாளர்கள் தமிழ் பேசும் மக்களை ஓரம் கட்டினார்கள். அவர்களை மதிக்கவில்லை. சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே போதும் நாம் வென்று விடுவோம் என்ற மமதையில் செயற்பட்டுள்ளார்.
எனவே, தமிழ் பேசும் மக்கள் மஹிந்தவை நிராகரித்தனர். மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றி பெறச்செய்தனர்.இது கடந்த கால ஆட்சியாளர்களுக்கு நல்ல பாடமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

